பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் மின்சாரம், ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தொடர்புடையவை ஆகும்.
புருலியா மாவட்டம் ரகுநாத்பூரில் அமைந்துள்ள ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (2x660 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் திட்டம் மிகவும் திறன் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. புதிய ஆலை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக அமையும்.
மெஜியா அனல் மின் நிலையத்தின் 7 மற்றும் 8-வது அலகுகளில் ஃப்ளூ கேஸ் டிசல்பிரைசேஷன் (FGD) அமைப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 650 கோடி செலவில் உருவாக்கப்பட்ட எஃப்.ஜி.டி அமைப்பு ஃப்ளூ வாயுக்களில் இருந்து சல்பர் டை ஆக்சைடை அகற்றி, சுத்தமான ஃப்ளூ வாயுவை உற்பத்தி செய்து ஜிப்சம் உருவாக்கும். இது சிமெண்ட் தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் 12-ல் ஃபராக்கா-ராய்கன்ஜ் பிரிவை (100 கிலோமீட்டர்) நான்கு வழிப்பாதையாக மாற்றும் சாலைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 1986 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
0 Comments