ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் பகுதி, தற்போது தமிழக அரசால் தொல்லியல் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்திலிருந்து 300 மீ., தொலைவில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பனைமரங்களுக்கு இடையில், 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், வலது கையில் ஈட்டியை ஏந்தியவாறும், இடது கையில் கேடயத்தை தாங்கியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. கேடயத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது.
0 Comments