ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for various development projects worth Rs 19,600 crore at Chandikhol, Odisha and dedicated the completed projects to the nation

ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ. 19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

எண்ணெய், எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், அணுசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இந்தத் திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தின் மோனோ எத்திலீன் கிளைக்கோல் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்தப் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சிங்காரா முதல் பிஞ்சபஹால் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49-ல் நான்கு வழிப்பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

சண்டிகோலில் சண்டிகோலில் – பாரதீப் பிரிவில் எட்டு வழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

ஐ.ஆர்.இ.எல் (ஐ) நிறுவனத்தின் ஒடிசா மணல் வளாகத்தில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.