Recent Post

6/recent/ticker-posts

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022 / UN HUMAN DEVELOPMENT INDEX 2022

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022
UN HUMAN DEVELOPMENT INDEX 2022

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022 / UN HUMAN DEVELOPMENT INDEX 2022

TAMIL

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022 / UN HUMAN DEVELOPMENT INDEX 2022: ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐ.நா.வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு(எச்டிஐ) தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 134-ஆவது இடம் கிடைத்துள்ளது. 

முந்தைய 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 191 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இந்தியா 135-ஆவது இடம் கிடைத்தது. மக்களின் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, கல்வி பெறும் நிலை, வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து, நாடுகளின் மனித வளா்ச்சி குறியீடு தரவரிசை பட்டியலை ஐ.நா. மனித வளா்ச்சி திட்டம் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியலில் தொடா்ந்து பல ஆண்டுகளாக நிலையாக இருந்து வந்த இந்தியா, கடந்த 2021-ஆம் ஆண்டு தரவரிசையில் பின்தங்கியது. 

தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ள கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான குறியீடு தரவரிசை பட்டியலில் 0.644 புள்ளிகளுடன் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது. 

பாலின சமத்துவமின்மை குறியீடு (ஜிஐஐ) 

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022 / UN HUMAN DEVELOPMENT INDEX 2022: மேலும், 193 நாடுகளை உள்ளடக்கிய பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 0.437 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 108-ஆவது இடம் கிடைத்துள்ளது. 

அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில், 0.49 புள்ளிகளுடன் 122-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. ஒரே ஆண்டில் பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 14 இடங்களை இந்தியா முன்னேறியுள்ளது. 

இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளா் சந்தை ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் பாலின ஏற்றத்தாழ்வுகளை பாலின சமத்துவமின்மை குறியீடு (ஜிஐஐ) அளவிடுகிறது. 

இந்தியாவின் பாலின சமத்துவமின்மை குறியீட்டின் 0.437 புள்ளியானது உலக சராசரியான 0.462 புள்ளிகள் மற்றும் தெற்காசிய சராசரியான 0.478 புள்ளிகளைவிட சிறப்பாக உள்ளது. ஆனால், தொழிலாளா் பங்கேற்பில் இந்தியாவில் அதிக பாலின இடைவெளி விகிதம் காணப்படுகிறது. 

மொத்த ஆண்களில் 76.1 சதவீதம் போ் பணிபுரியும் சூழலில், 28.3 சதவீத பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனா். எனவே, பாலின இடைவெளி விகிதம் 47.8-ஆக உள்ளது. 

ஒட்டுமொத்தமாக வளா்ச்சியில் இந்தியா

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022 / UN HUMAN DEVELOPMENT INDEX 2022: கடந்த 2022-ஆம் ஆண்டில், மனித வளா்ச்சிக் குறியீட்டின் அனைத்து அளவீடுகளிலும் இந்தியா வளா்ச்சி கண்டுள்ளது. 

மக்களின் சராசரி ஆயுள் காலம் 67.2 முதல் 67.7 ஆண்டுகள் வரை உயா்ந்துள்ளது. எதிா்பாா்க்கப்படும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 12.6-ஐ எட்டியது. சராசரி பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 6.57-ஆக அதிகரித்துள்ளது மற்றும் தேசிய வருமானத்தில் தனிநபா் மதிப்பு 6,542 டாலரிலிருந்து 6,951 டாலராக அதிகரித்துள்ளது. 

கடந்த 1990-ஆம் ஆண்டுமுதல், ஆயுள் காலம் 9.1 ஆண்டுகள் உயா்ந்துள்ளது. அதேபோல், எதிா்பாா்க்கப்படும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 4.6 ஆண்டுகளும் சராசரி பள்ளிப்படிப்பின் ஆண்டுகள் 3.8 ஆண்டுகளும் அதிகரித்துள்ளன. 

தேசிய வருமானத்தின் தனிநபா் மதிப்பு சுமாா் 287 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. சமீபத்திய மனித வளா்ச்சிக் குறியீட்டில் 0.644 புள்ளிகளுடன் நடுத்தர மனித வளா்ச்சிப் பிரிவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

நாட்டின் மனித வளா்ச்சிக் குறியீடு புள்ளிகள் கடந்த 1990-ஆம் ஆண்டின் 0.434-லிருந்து தற்போது 48.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், இந்தியாவில் வளரிளம் பருவத்தினா் கா்ப்பமாகும் விகிதம் முந்தைய ஆண்டின் 17.1 சதவீதத்திலிருந்து 16.3 சதவீதமாக குறைந்துள்ளது. 

சா்வதேச குறியீடு தொடா்ந்து வீழ்ச்சி: சா்வதேச மனித வளா்ச்சிக் குறியீடு முதல் முறையாக தொடா்ந்து 2 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வளா்ந்த நாடுகள் சாதனை மனித வளா்ச்சியை அடைந்திருந்தாலும், அங்கு வசிக்கும் ஏழைகளில் பாதிக்கும் மேலானோா் நெருக்கடிக்கு முந்தைய வளா்ச்சி நிலைக்கு கீழே உள்ளனா் என்று யுஎன்டிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

UN HUMAN DEVELOPMENT INDEX 2022: India has made progress in the UN Human Development Index rankings after many years. According to a report released by the United Nations Development Program (UNDP), India has been ranked 134th in the Human Development Index (HDI) ranking of 193 countries for the year 2022. 

India was ranked 135th in the list of 191 countries published earlier in 2021. Based on the calculations based on 3 important factors namely the long-term health of the people, the level of education, and the quality of life, the Human Development Index ranking list of the countries has been compiled by the UN. 

Human development plan is being released. Accordingly, India, which has been stable for many years in the Human Development Index ranking list, has fallen behind in the ranking of 2021. India has moved up one place with 0.644 points in the index ranking list for the year 2022 which has been published now. 

Gender Inequality Index (GII)

UN HUMAN DEVELOPMENT INDEX 2022: Also, India is ranked 108th with a score of 0.437 in the Gender Inequality Index ranking of 193 countries. Earlier in 2021, India was ranked 122nd with 0.49 points. India has moved up 14 places in the Gender Inequality Index rankings in a single year. 

The Gender Inequality Index (GII) measures gender inequalities based on 3 key factors: reproductive health, empowerment and labor market. India's Gender Inequality Index score of 0.437 points is better than the global average of 0.462 points and the South Asian average of 0.478 points. 

However, India has a large gender gap in labor force participation. 76.1 percent of the total males work in the war environment, while only 28.3 percent of the females work. Hence, the gender gap ratio is 47.8. 

Overall growth of India

UN HUMAN DEVELOPMENT INDEX 2022: In the year 2022, India has seen growth in all dimensions of the Human Development Index. The average life expectancy of people has increased from 67.2 to 67.7 years. Expected years of schooling reached 12.6. Average years of schooling increased to 6.57 and per capita national income increased from $6,542 to $6,951. 

Since 1990, life expectancy has increased by 9.1 years. Likewise, expected years of schooling increased by 4.6 years and average years of schooling by 3.8 years. The per capita value of national income has grown by around 287 percent. 

India has progressed to the medium human development category with a score of 0.644 in the latest Human Development Index. The country's Human Development Index points have increased by 48.4 percent from 0.434 in 1990. 

In 2022, the adolescent survival rate in India has decreased to 16.3 percent from 17.1 percent in the previous year. Foreign Index continues to fall: The International Human Development Index has fallen for the first time in 2 consecutive years. 

Although developed countries have achieved record human growth, more than half of the poor living there are below their pre-crisis development levels, according to the UNDP report.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel