Recent Post

6/recent/ticker-posts

லமிட்டியே பயிற்சி 2024 கூட்டு ராணுவப் பயிற்சி / LAMITIYE Exercise 2024 is a joint military exercise

லமிட்டியே பயிற்சி 2024 கூட்டு ராணுவப் பயிற்சி / LAMITIYE Exercise 2024 is a joint military exercise

இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு (எஸ்.டி.எஃப்) இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான "லமிட்டியே-2024" இன் பத்தாவது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழு இன்று செஷல்ஸுக்குப் புறப்பட்டது. 

இந்த கூட்டுப் பயிற்சி 2024 மார்ச் 18 முதல் 27 வரை செஷல்ஸில் நடத்தப்படும். கிரியோல் மொழியில் 'நட்பு' என்று பொருள்படும் ‘லமிட்டியே’ என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பயிற்சி நிகழ்வாகும், 

இது 2001 முதல் செஷெல்ஸில் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் கோர்கா ரைபிள்ஸ் பிரிவில் இருந்து தலா 45 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், துணை நகர்ப்புற சூழலில் மரபுசார் செயல்பாடுகளில் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். 



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel