பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் சாலை, ரயில்வே, தூய்மை கங்கை உள்ளிட்ட திட்டப் பணிகள் அடங்கும்.
ரூ. 18,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.
பீகாரில் தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2,190 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட பன்னிரண்டு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments