Recent Post

6/recent/ticker-posts

பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.39,125.39 கோடி மதிப்புள்ள ஐந்து ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது / Defense Ministry signs five contracts worth Rs 39,125.39 crore to promote self-reliance in defense sector

பாதுகாப்பு துறையில் தற்சார்பை அடைவதன் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யும் (மேக்-இன்-இந்தியா) முன்முயற்சியை மேலும் ஊக்குவிக்கவும், பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மார்ச் 1, 2024) புதுதில்லியில் ரூ. 39,125.39 கோடி மதிப்புள்ள ஐந்து முக்கிய கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமானே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மிக்-29 விமானங்களுக்கான ஏரோ-இன்ஜின்களை கொள்முதல் செய்வதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. 

சிஐடபிள்யூஎஸ் ஆயுத அமைப்பு கொள்முதல் மற்றும் உயர் சக்தி ரேடார் (எச்பிஆர்) கொள்முதல் செய்வதற்காக லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பிரம்மோஸ் ஏவுகணைகள் தொடர்பாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel