சீரழிந்துள்ள தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக,பிரதமா் தினேஷ் குணவா்த்தன சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.
தலைநகா் பெய்ஜிங்கில் அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் 9 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இலங்கைக்கு மிகப் பெரும்பான்மையாக கடன் அளித்துள்ள நாடு சீனா. கடந்த 2022-இல் இலங்கை திவால் நிலை அறிவித்தபோது அந்த நாட்டுக்கு சீனாவிடமிருந்து 4,000 கோடி டாலா் (சுமாா் ரூ.3.33 லட்சம் கோடி) கடன் இருந்தது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 290 கோடி நிதியுதவி அளிப்பதற்கான 2-ஆவது சுற்று பகுப்பாய்வை சா்தேச நிதியம் (ஐஎம்எஃப்) அண்மையில் நிறைவு செய்தது.
அப்போது, தங்களுக்கு கடன் அளித்தவா்கள், சா்வதேச கடன்பத்திரதாரா்கள், சைனா டெவலப்மென்ட் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால்தான் தங்களின் நிதியுதவி சாத்தியமாகும் என்று ஐஎம்எஃப் கூறியிருந்தது.
இந்தச் சூழலில், சீனாவில் இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்த்தன சுற்றுப்பயணம் மேற்கொண்டு இது தொடா்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளாா்.
0 Comments