குடியரசுத் தலைவர், 2024 பிப்ரவரி 9 தேதியிட்ட அறிவிக்கை மூலம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு சட்டம், 2003-ன் பிரிவு 4(1)-ன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு ஆணையராக திரு ஏ.எஸ்.ராஜீவை நியமித்துள்ளார்.
மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழு சட்டம் 2003-ன் பிரிவு 5(3)-ல் உள்ள விதிமுறைக்கு இணங்க, குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் முன்பாக திரு ஏ.எஸ்.ராஜீவ் (2024, மார்ச் 11) இன்று ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
0 Comments