Recent Post

6/recent/ticker-posts

வில்வித்தை வீராங்கனை செல்வி ஷீத்தல் தேவி தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாளமாகத் தேர்வு / Archery player Ms. Sheetal Devi has been chosen as the Election Commission's National Symbol for Persons with Disabilities

முதன்முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) இணைந்து, இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்க (ஐடிசிஏ) அணி மற்றும் தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தியது. 

வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி நேற்று (மார்ச் 16, 2024) புது தில்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி ஷீத்தல் தேவி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel