Recent Post

6/recent/ticker-posts

காஸா போர் நிறுத்தம் குறித்து ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறிய தீர்மானம் / First resolution passed at UN on Gaza ceasefire

காஸா போர் நிறுத்தம் குறித்து ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறிய தீர்மானம் / First resolution passed at UN on Gaza ceasefire

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது.

பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது. 

தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது. 

அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel