2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான (2011-12) விலையில் ஜிடிபி ரூ 43.72 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ 40.35 லட்சம் கோடியாக இருந்தது, இது 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது.
மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருவதாக அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7 சதவீதம்), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் நல்ல வளர்ச்சி விகிதம் (8.5 சதவீதம்) FY24 இல் GDP வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments