பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் பெகுசாராயில் ரூ. 13,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நாடு முழுவதும் சுமார் ரூ. 1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பரவுனியில் இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன் லிமிடெட் (HURL) உரத் தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 3917 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டில் உள்ள கால்நடைகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளமான 'பாரத் பசுதன்' -ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
'பாரத் பசுதான்' தரவுத்தளத்தின் கீழ் உள்ள அனைத்து தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்யும் செயலியான '1962 விவசாயிகள் செயலி' என்ற செயலியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments