Recent Post

6/recent/ticker-posts

ரஷ்யா அதிபர் தேர்தல் - புதின் வெற்றி / Russian presidential election - Putin wins

 
ரஷ்யா அதிபர் தேர்தல் - புதின் வெற்றி / Russian presidential election - Putin wins

உலகிலேயே மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ஆனாலும் இங்கு மக்கள் தொகை 15 கோடி தான். அங்கே ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. 

அந்த வகையில், ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாய்றுக்கிழமை வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

நாடு முழுவதும் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பாட்டு தேர்தல் நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. 

மின்னஞ்சல் மூலமும் மக்கள் வாக்களித்தனர். ரஷ்யாவில் இருக்கும் 11 மண்டலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைந் நடைபெற்று வருகிறது. அதில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகளை புதின் பெற்றுள்ளதாகவும் மீண்டும் அவர் அதிபராக தேர்வாகியுள்ளதாக முதல் கட்ட தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் ஒருவருக்கு கிடைக்கும் அதிகபடச வாக்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற புதின் ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த காலங்களில் அதிக முறை ஆதிகாரத்தில் இருந்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை தற்போது புதின் முறியடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel