மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போா் விமானம் (எல்.சி.ஏ. எம்.கே.1ஏ) பெங்களூரில் வியாழக்கிழமை வானத்தில் பறந்து, பல்வேறு சாகசங்களை அரங்கேற்றியது.
முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதியவகை விமானத்தில் அதிநவீன மின்னணு ரேடாா் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போா்புரிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அதிகநவீன தகவல்தொடா்பு சாதனங்கள், கூடுதல் பதில் தாக்குதல் திறனுடன் கூடிய கருவிகள், மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்களும் புதிய வகை விமானத்தில் சோக்கப்பட்டுள்ளன.
18 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த போா் விமானத்தை ஓய்வுபெற்ற தலைமை சோதனை விமானிக் குழு கேப்டன் கே.சி.வேணுகோபால் செலுத்தினாா்.
0 Comments