Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2024 / Lok Sabha Election 2024 in Tamil Nadu

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2024 / Lok Sabha Election 2024 in Tamil Nadu

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதும், அதற்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்க ப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

அதன் பின்னர், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக தருமபுரி 81.48%, கள்ளக்குறிச்சி 79.25%, நாமக்கல் 78.16%, சேலம் 78.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel