இந்தியாவில் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமுமான ஆர்இசி லிமிடெட், இந்தியாவில் தகுதியான பசுமை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக் கடனாகப் பெறுகிறது.
இத்தாலிய ஏற்றுமதி கடன் நிறுவனம், எஸ்ஏசிஇ-யிடமிருந்து இந்தக் கடன் பெறப்படுகிறது. இந்திய அரசின் ஒரு நிறுவனத்திற்கும் எஸ்ஏசிஇ நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் முதல் கடன் ஒத்துழைப்பு இதுவாகும்.
இந்த கடன் வசதி ஆர்இசி நிறுவனத்திற்கான உத்திசார் முதலீடாக அமையும். இது இந்த நிறுவனத்தின் பசுமை நிதி கட்டமைப்புடன் இணைந்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments