ராணுவ மருத்துவ சேவைகள் 2024 ஏப்ரல் 22 அன்று தில்லி இந்தியத் தொழில்நுட்ப கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
புதிய மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது, பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவது ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கூட்டு பிஎச்டி ஆய்வுகளை உருவாக்கவும் திட்டமிடப்படும்.
0 Comments