Recent Post

6/recent/ticker-posts

பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) அறிமுகப்படுத்தியுள்ளது / National Thermal Power Corporation (NTPC) has launched a new initiative of Women Empowerment Movement

பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) அறிமுகப்படுத்தியுள்ளது /  National Thermal Power Corporation (NTPC) has launched a new initiative of Women Empowerment Movement

தேசிய அனல் மின் கழகம், அதன் முதன்மையான பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சியாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

ஏப்ரல் 2024 முதல், பெண்களுக்கு அதிகாரமளித்தலின் புதிய முயற்சியின் கீழ் மின்சாரத் துறை, பொதுத்துறை, அடையாளம் காணப்பட்ட 42 இடங்களில், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3,000 திறமையான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். 

இந்த இயக்கத்தின் மூலம் பயனடையும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும். இதுவரை, மொத்தம் 7,424 சிறுமிகள் பயனடைந்துள்ளனர். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சீராக அதிகரித்து வருகிறது.

2023-ம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் 16 மாநிலங்களில் பரவலாக உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் 40 இடங்களில் 2,707 பெண்கள் பயிலரங்கில் பங்கேற்றனர்.

இந்த இயக்கம் பல்வேறு தலையீடுகள் மூலம் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் தலைமைத்துவ குணங்களை அடையாளம் கண்டு வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனால் அவர்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க முடியும். இந்தப் பயிலரங்கு உடல்நலம், சுகாதாரம், பாதுகாப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel