இந்திய கடற்படை பூர்வி லெஹார் பயிற்சியை கிழக்கு கடற்கரையில் நடத்தியது, கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் செயல்பாட்டு கட்டுப்பாட்டின் கீழ் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்திய கடற்படையின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான நடைமுறைகளை சரிபார்ப்பதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டது.
இந்தப் பயிற்சியில் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகள் பங்கேற்றன. யதார்த்தமான சூழ்நிலையில் போர் பயிற்சி மற்றும் ஆயுத கட்டத்தின் போது பல்வேறு துப்பாக்கிச் சூடுகளை வெற்றிகரமாக நடத்துவது, போர் சூழலில் வியூகம் வகுப்பது உட்பட பல கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
பல்வேறு இடங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டதால், செயல்பாட்டுப் பகுதி முழுவதும் தொடர்ச்சியான கடல்சார் விழிப்புணர்வு பராமரிக்கப்பட்டது.
கிழக்கு கடற்படை கட்டளையின் கப்பல்கள் மற்றும் தளவாடங்களுடன், இந்தப் பயிற்சியில் இந்திய விமானப்படை, அந்தமான் & நிக்கோபார் கட்டளை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் கப்பல்களும் பங்கேற்றன.
யதார்த்தமான நிலைமைகளின் கீழ் செயல்படும் படைகளுக்கு இந்த பயிற்சி மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கியது, இதன் மூலம் பிராந்தியத்தில் கடல்சார் சவால்களுக்கு திறம்பட பதிலளிக்க அவர்களின் தயார்நிலையை மேம்படுத்தியது.
இந்தப் பயிற்சியின் வெற்றிகரமான முடிவு, கடல்சார் களத்தில் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் பறைசாற்றுகிறது.
0 Comments