தென்கொரியாவில் வில்வித்தை உலக கோப்பை (ஸ்டேஜ்-2) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி துருக்கி அணியை 232-226 என புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர்தான் இந்த தங்கப்பதக்கத்தை வென்றனர்.
ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்டேஜ்-1லும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி கூட்டணிதான் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற போட்டியிலும் இவர்கள் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் கலப்பு அணியில் ஜோதி, பிரியான்ஷ் தங்கத்திற்கான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
%202024%20-%20India%20Women's%20Team%20Wins%20Gold.jpg)

0 Comments