Recent Post

6/recent/ticker-posts

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 / World Hydrogen Summit 2024

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024

World Hydrogen Summit 2024

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 / World Hydrogen Summit 2024

TAMIL

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 / World Hydrogen Summit 2024: 2024 மே 13 முதல் 15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 -ல் முதல் முறையாக இந்தியா தனது சொந்த அரங்கத்தை அமைத்துள்ளது. 

இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கு, உச்சிமாநாட்டின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும். இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் எஸ் பல்லா-வால் மே 12 அன்று திறந்து வைக்கப்பட்டது.

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பசுமை ஹைட்ரஜன் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த மாநாட்டின் இந்திய அரங்கம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது

இந்தியக் குழுவில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ரயில்வே அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். 

பல்வேறு ஜி2ஜி கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் இந்திய தொழில்துறை ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.


ENGLISH

World Hydrogen Summit 2024: For the first time, India will host the World Hydrogen Summit 2024 in Rotterdam, Netherlands from 13 to 15 May 2024. The India Hall, set up by the Ministry of New and Renewable Energy, Government of India, is one of the largest venues for the summit. It was inaugurated on 12th May by Secretary, Ministry of New and Renewable Energy, Mr. Bhupinder S. Balla-wal.

The World Hydrogen Summit is a prestigious event in the global green hydrogen ecosystem. Around 15,000 delegates from all over the world are expected to attend the conference. The Indian venue of the conference provides an opportunity to showcase the country's progress in the field of green hydrogen to the world

The Indian team includes representatives from Ministry of New and Renewable Energy, Department of Science and Technology, Ministry of Railways, Ministry of Petroleum and Natural Gas and private sector companies. In addition to various G2G discussions, the summit provides a platform for Indian industry to engage with companies from around the world.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel