தென்கொரியாவின் யெச்சியான் நகரில் உலக வில் வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிா் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இறுதிச் சுற்றில் உலகின் நம்பா் ஒன் அணியான இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அதிதி சுவாமி, பா்னீத் கௌா் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 232-226 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியின் ஹஸல், பேகம் யுவா, அய்ஸெ பெரா ஆகியோா் கொண்ட அணியை வீழ்த்தி தங்கம் வென்றனா்.
இதன் மூலம் இந்திய மகளிா் அணி காம்பவுண்ட் பிரிவில் ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளது. ஷாங்காயில் முதல் கட்டப் போட்டியிலும், இத்தாலியின் டௌனிங் நகரிலும் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்றிருந்தனா்.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஆசிய சாம்பியன் ஜோதி சுரேகா-பிரியான்ஷ் இணை தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவற விட்டனா். அமெரிக்க இணையான ஒலிவியா-சாயரிடம் 155-153 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்கு பின் வெள்ளியைக் கைப்பற்றினா்.
0 Comments