Recent Post

6/recent/ticker-posts

விவசாயிகள் ஆதரவு திட்டத்திற்காக ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி / PM Modi released Rs 20,000 crore for farmers support scheme

விவசாயிகள் ஆதரவு திட்டத்திற்காக ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி / PM Modi released Rs 20,000 crore for farmers support scheme

வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதை அடுத்து முதல்முறையாக அங்கு சென்றார். பிரதமராக பதவியேற்றப் பிறகு 17 ஆவது தவணை பிஎம் கிஷான் சம்மன் நிதியை வெளியிடுவதற்கான கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தவணையை நேரடிமுறை பணப் பரிமாற்றம் மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel