Recent Post

6/recent/ticker-posts

இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6வது கட்டப் பேச்சு / 6th round of talks between Indian Navy – Royal Navy of Oman

இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6வது கட்டப் பேச்சு / 6th round of talks between Indian Navy – Royal Navy of Oman

இந்தியா – ஓமன் இடையே கடற்பகுதியில் தற்போதுள்ள ராணுவத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6-வது கட்ட பேச்சுக்கள் புதுதில்லியில் 2024 ஜூன் 4, மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது.

ஓமன் கடற்படை சார்பில் கமாண்டர் ஜெசிம் முகமது அலி அல் பலூசியும் இந்திய கடற்படை சார்பில் கமாண்டர் மன்மீத் சிங் குரானா ஆகியோர் இப்பேச்சுக்களுக்குத் தலைமை வகித்தனர்.

கடல்சார் பாதுகாப்பு சவால்கள் குறித்து இப்பேச்சுக்களில் விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்து செயல்படுத்தல், தகவல் பரிமாற்றம், கடல்சார் பகுதி விழிப்புணர்வு, பயிற்சி, வானியல், தொழில்நுட்ப உதவி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஓமன் கடற்படைக் குழு இந்திய கடற்படையின் குழுத் துணைத்தலைவர், வைஸ் அட்மிரல், தருண் சோப்தியை சந்தித்து பேசினர். வளைகுடா பகுதியில் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ஓமன் திகழ்கிறது. கடற்படை ஒத்துழைப்புத் தொடர்பாக இருநாட்டு கடற்படை இடையேயான பேச்சுக்கள் வழக்கமாக நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel