Recent Post

6/recent/ticker-posts

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024 / சிறந்த திருநங்கை விருது 2023 - 2024

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024
சிறந்த திருநங்கை விருது 2023 - 2024

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024 / சிறந்த திருநங்கை விருது 2023 - 2024

TAMIL

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024 / சிறந்த திருநங்கை விருது 2023 - 2024: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது கன்னியாகுமரியைச் சேர்ந்த சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டது. திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில் தொடர் சேவை புரிந்ததற்காக சந்தியா தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக கடந்த 25 ஆண்டுகளாக வில்லிசைக் கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவியின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

யார் இந்த சந்தியா தேவி?

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024 / சிறந்த திருநங்கை விருது 2023 - 2024: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் சந்தியாதேவி. திருநங்கையான இவர் தற்போது தோவாளையில் வசித்து வருகிறார். 

தோவாளையில் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு அதனைக் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் முதல் திருநங்கை வில்லிசை கலைஞர் என்ற பெருமை பெற்றவர்.

வில்லிசையின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்கள், மற்றும் கலாச்சார விழாக்களில் சந்தியா தேவி வில்லிசை கச்சேரிகளை நடத்தியுள்ளார், 1000 க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார்.

வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக வில்லிசை கலையை பரப்பி வருகிறார் சந்தியா தேவி.

பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார். 

மேலும், தோவாளையைச் சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும், மனவளர்ச்சி குன்றிய ஒரு 8 வயது குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.

மேலும், பொதுச்சேவை மற்றும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் சந்தியா தேவி ஆர்வம் காட்டி வந்தார். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் தோவாளை ஊராட்சி 4-வது வார்டில் போட்டியிடுமாறு அப்பகுதி மக்கள் சந்தியாதேவியிடம் வலியுறுத்தினர். மக்களின் விருப்பத்தை ஏற்று போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராகி மக்கள் சேவை ஆற்றி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காலகட்டத்தில், சமூக இடைவெளி விட்டு தோவாளை 4வது வார்டு பகுதி மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

சரியான புரிதல் இன்றி இருந்த கிராம பெண்களிடம் தனித்திருப்பதின் அவசியத்தையும், முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தம் செய்வது குறித்தும் எடுத்து கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ENGLISH

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024: Sandhya Devi from Kanyakumari has been awarded the Best Transgender Award for the year 2023-24 by the Department of Social Welfare and Women's Rights, Government of Tamil Nadu. Sandhya Devi has been given this award for her continuous service in an outstanding manner for the welfare of transgender people.

Best Transgender Award: A transgender person who has served the welfare of transgender people in an outstanding manner and is a role model among them, has been selected by a committee headed by the Minister of Social Welfare and Women's Rights and the Best Transgender Award has been presented by the Tamil Nadu government since 2021.

In that way, Tamil Nadu Chief Minister Stalin gave her the Best Transgender Award for the year 2024 of the Tamil Nadu Government, a check of Rs. Appreciated by giving.

Who is this Sandhya Devi?

BEST TAMILNADU TRANSGENDER AWARD 2023 - 2024: Sandhyadevi hails from Oluginassery in Nagercoil, Kanyakumari district. She is transgender and currently lives in Dovalai. He is engaged in the business of flower arranging in Thovalai. He got interested in Villisai and is learning it and doing well. He is the first transgender artist.

Sandhya Devi has performed Villisai concerts in temples and cultural festivals in other parts of Tamil Nadu, not only in Kanyakumari district, the birthplace of Villisai, and has conducted more than 1000 Villisai programs in Tamil Nadu and Kerala.

He is conducting awareness programs like corona awareness, social welfare programs, prevention of dowry, prevention of violence against women through Villisai program. Sandhya Devi has been spreading the art of Villisai for about 25 years.

He has been helping many transgenders to engage in rural arts by teaching them Villisai to earn their own income. Also, he has taken responsibility for all the education expenses of a poor 9th standard boy from Thovala. Also, she has adopted and cared for an 8-year-old child with mental retardation.

Sandhya Devi was also interested in public service and creating health awareness among people. Following this, the people of the area urged Sandhyadevi to contest in the 4th Ward of Dovala Panchayat in the local body elections. He contested by accepting the will of the people and won and became a ward member and is serving the people.

During the period of Corona threat, he left social distance and created Corona awareness among the people of 4th Ward. He informed the village women who were without proper understanding about the necessity of isolation, wearing face mask and washing hands and made them aware.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel