இதே போல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கின. இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2005இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது தீர்ப்பளித்து இருந்தது.
அதில், உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளித்தனர்.
இதில் தலைமை நீதிபதி உட்பட 6 நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். 6 நீதிபதிகளும் மாநிலங்கள் அறிவித்த உள்இடஒதுக்கீடு செல்லும் என்றும், அந்த உள்இடஒதுக்கீடு அரசியல் சாசன அமர்வின் 14வது பிரிவை மீறவில்லை.
பட்டியல் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் மாநில அரசுகள் உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தனர்.
நீதியரசர் கவாய் குறிப்பிட்ட தீர்ப்பில், “எஸ்சி எஸ்டி பிரிவினரிடையே உள்ள கிரீமி (creamy layer) லேயர் எனப்படும் உட்பிரிவை அடையாளம் கண்டு அவர்களில் குறிப்பிட்ட பிரிவினர்களை வெளியேற்றுவதற்கு அரசு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். இதுவே உண்மையான சமத்துவத்தை பெறுவதற்கான ஒரே வழியாகும் என குறிப்பிட்டார்.
நீதிபதி விக்ரம் நாத் இந்தக் கருத்தை ஆமோதித்து, ஓபிசிக்களுக்குப் பொருந்தும் கிரீமி (creamy layer) லேயர் எனப்படும் உட்பிரிவு கொள்கை பட்டியலினத்தவர்களுக்கு பொருந்தும் என்று கூறினார்.
நீதிபதி பங்கஜ் மீத்தல் கூறுகையில், இந்த உள்இடஒதுக்கீட்டை முதல் தலைமுறையினருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறையைச் சேர்ந்த எவரேனும் உள்இடஒதுக்கீட்டின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்திருந்தால், 2வது தலைமுறையினர் இடஒதுக்கீட்டை பெற கூடாது என்று நீதிபதி மித்தல் கூறினார்.
நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கூறுகையில், கிரீமி (creamy layer) லேயர் எனப்படும் உட்பிரிவு கொள்கை போல பட்டியலினத்தவர்களை அடையாளம் கண்டு மாநிலத்தின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி கவாயின் கருத்தை போல தீர்ப்பை குறிப்பிட்டார்.
0 Comments