பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் தடகள வீராங்கனை சிம்ரன் சர்மா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவைச் சேர்ந்த நவ்தீப் சிங் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி சுற்றில் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாவது இடம் பிடித்திருந்தார்.
அதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஈரான் வீரர் சாடேக் பெயிட் சாயா 47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்து இருந்தார் அவருக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர் தங்கம் வென்றதைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்தி இருக்கிறார்.
அதனால் பாராலிம்பிக்ஸ் விதிகளின்படி இது தவறு என்பதால் அவரது தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டிருகிறது. தகுதி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.
இதனால் வெள்ளிப் பதக்கம் வென்ற நவ்தீப் சிங்கிற்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாராலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில் தனது சிறந்த ஈட்டி எறிதலை பதிவு செய்திருந்தார்.
0 Comments