Recent Post

6/recent/ticker-posts

இந்தியா அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி - யுத் அப்யாஸ் 2024 / India-US Joint Military Exercise - Yudh Abhyas 2024

இந்தியா அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி - யுத் அப்யாஸ் 2024 / India-US Joint Military Exercise - Yudh Abhyas 2024

யுத் அப்யாஸ் -2024 எனும் இந்தியா- அமெரிக்கா இடையேயான 20-வது கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் தொடங்கியது. 

இந்தப் பயிற்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும். 2004 முதல் இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக ஆண்டுதோறும் இப்பயிற்சி மாறி மாறி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் இந்திய தரப்பில் இருந்து ராஜ்புத் படைப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் அலாஸ்காவைச் சேர்ந்த படைப்பிரிவுகளின் 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஐ.நா சபை சாசனத்தில் 7-வது பிரிவின் கீழ், பயங்கர வாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பு கூட்டு ராணுவ திறன்களை அதிகரிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel