பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சந்திரயான் - 4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்), 2040க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால இந்திய விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு வகுத்துள்ளது.
0 Comments