Recent Post

6/recent/ticker-posts

டெல்லியின் 8வது முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார் / Atishi took oath as the 8th Chief Minister of Delhi

டெல்லியின் 8வது முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார் / Atishi took oath as the 8th Chief Minister of Delhi

டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் புகாரில் சிக்கி சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, டெல்லி அமைச்சரவையையும் கலைத்தார். இதனை அடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் புதிய அமைச்சரவையில், முன்னதாக அமைச்சர்களாக இருந்த சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக புதிய அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில், முதலமைச்சர் உள்பட 7 அமைச்சர்கள் முழுபலத்துடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இன்று பதவியேற்பு விழா நடத்த ஆம் ஆத்மி பரிந்துரைத்த நிலையில், புதிய முதலமைச்சர் தொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

அதன்படியே மாலை 4 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது டெல்லியின் 8வது முதலமைச்சராக அதிஷி (43) பதவியேற்றுக்கொண்டார்.

புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அதிஷிக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சுஸ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை அடுத்து டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்றிருக்கிறார்.

தொடர்ந்து செப்.26 மற்றும் 27ம் தேதிகளில் சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். தற்போது வரை டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel