குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரயில்வே, சாலை, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நிதித் துறைகளில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே, இந்தியாவின் முதலாவது நமோ பாரத் விரைவு ரயிலை திரு மோடி தொடங்கி வைத்தார்.
நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் முதல் வாரணாசி, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி மற்றும் வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.
0 Comments