தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு அமைச்சகம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் ரூ .26,000 கோடிக்கும் அதிகமான செலவில் எஸ்யு-30 எம்கேஐ விமானங்களுக்கான 240 ஏஎல் -31 எஃப்பி ஏரோ என்ஜின்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
செப்டம்பர் 09, 2024 அன்று புதுதில்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் எச்ஏஎல் மூத்த அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஏரோஎன்ஜின்கள் எச்ஏஎல்-ன் கோராபுட் பிரிவால் தயாரிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலைக்காக எஸ்யு -30 கடற்படையின் செயல்பாட்டு திறனைத் தக்கவைக்க இந்திய விமானப்படையின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்த கால அட்டவணையின்படி ஆண்டுக்கு 30 ஏரோ என்ஜின்களை எச்ஏஎல் வழங்கும். அனைத்து 240 என்ஜின்களின் சப்ளை அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறைவடையும்
0 Comments