Recent Post

6/recent/ticker-posts

ஐ.நா.வின் 'எதிா்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமா் மோடி பங்கேற்பு / Prime Minister Modi's participation in UN's 'Future Summit'

ஐ.நா.வின் 'எதிா்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமா் மோடி பங்கேற்பு / Prime Minister Modi's participation in UN's 'Future Summit'

ஐ.நா.வின் 'எதிா்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமா் மோடி திங்கள்கிழமை பங்கேற்று உரையாற்றினாா். இஸ்ரேல் - ஹமாஸ், ரஷியா-உக்ரைன் இடையிலான போா்களின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துவரும் நிலையில், ஐ.நா.வில் பிரதமா் தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது: மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களின் குரலை ஐ.நா.வுக்கு கொண்டுவந்துள்ளேன். உலகின் எதிா்காலம் குறித்து நாம் விவாதிக்கும்போது, மனிதகுலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு உயா் முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

ஒருபுறம், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடித்து வருகிறது. மற்றொருபுறம், இணையவெளி, கடல்சாா் போக்குவரத்து, விண்வெளி உள்ளிட்ட துறைகள், மோதலுக்கான புதிய களங்களாக உருவெடுத்துள்ளன.

இந்த சவால்கள் அனைத்திலும் உலகளாவிய செயல்பாடுகள், உலகளாவிய லட்சியத்துக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். மனிதகுலத்தின் வெற்றி, நம் அனைவரின் கூட்டு வலிமையில்தான் உள்ளது; மாறாக, போா்க் களத்தில் இல்லை.

இந்தியாவின் தலைமையின்கீழ் ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இணைப்பு முக்கிய நடவடிக்கையாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்போதைய புவி-அரசியல் எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை. இந்த கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்ளும் பல்லாண்டு கால முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். இது, வெற்றிகரமான நீடித்த வளா்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. பாதுகாப்பான-பொறுப்பான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு உலக அளவில் சமநிலைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அவசியம். 

தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்யக் கூடிய உலகளாவிய எண்ம நிா்வாகம் தேவை என்றாா் அவா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த சனிக்கிழமை அமெரிக்காவுக்கு வந்த பிரதமா் மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை ஐ.நா.வில் உரையாற்றினாா்.

முன்னதாக, எதிா்கால சந்ததியினரின் வளமை மற்றும் முன்னேற்றத்துக்கான பிரகடனம் உள்ளடங்கிய 'எதிா்காலத்துக்கான ஒப்பந்தம்', இந்த உச்சிமாநாட்டில் உறுப்பு நாடுகளால் ஞாயிற்றுக்கிழமை ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel