பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ககன்யான் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாரதிய விண்வெளி நிலையத்தின் (பிஏஎஸ்-1) முதல் தொகுதியை மேம்படுத்தவும், கட்டமைப்பதற்கும், இயக்குவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து சரிபார்க்கும் இயக்கங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதிய விண்வெளி நிலையம் மற்றும் முன்னோடி இயக்கங்களுக்கான புதிய மேம்பாடுகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள ககன்யான் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான கூடுதல் தேவைகளை உள்ளடக்கும் வகையில் ககன்யான் திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதியுதவியை மாற்றியமைத்தல் இதில் அடங்கும்.
0 Comments