தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ.12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, வருமான உச்சவரம்பு இன்றி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
0 Comments