Recent Post

6/recent/ticker-posts

2024 செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / Rs. 1.73 lakh crore GST collection in month of September 2024

2024 செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / Rs. 1.73 lakh crore GST collection in month of September 2024

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 1.62 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 6.5% அதிகரித்துள்ளது. இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.

செப்டம்பர் மாதத்தில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகிய வரிகளின் மூலம் கிடைத்த வசூலும் அதிகரித்துள்ளது. 2024-ல் இதுவரை வசூலான மொத்த ஜிஎஸ்டி 10.9 லட்சம் கோடி. இதுகடந்த ஆண்டை விட 9.5% அதிகமாகும். 

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.9.9 லட்சம் கோடி வசூலானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

2023 - 2024 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி ரூ. 20.18 லட்சம் கோடி. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel