ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்த திரு மோடி, ரூ.2,800 கோடி மதிப்பிலான 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கி வைத்தார். 25 ஏகலைவா பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் ஜன்மான் எனப்படும் பழங்குடியினர் நியாய பேரியக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
பிரதம மந்திரி ஜன்ஜதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தின் கீழ் ரூ .1360 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments