ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஒன்பது பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவை இந்த வங்கிகளாகும்.
தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பெண் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிப்பதற்காக இந்த வங்கிகள் குறிப்பிட்ட திட்டங்களை வடிவமைத்துள்ளன.
அவ்வாறு வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்கள் பெண்கள் தங்கள் நிறுவனங்களை அளவிடுவதற்கு பெரிய அளவிலான கடன்களைப் பெற உதவும்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தபடி லட்சாதிபதி சகோதரியை உருவாக்கும் இலக்கை அடைவதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments