மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களின் பேரவைத் தேர்தலும், 14 மாநிலங்களில் உள்ள 48 பேரவைத் தொகுதிகளுக்கும், வயநாடு உள்ளிட்ட 2 மக்களவைத் தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணியில், பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை கட்சிகள் இணைந்து பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.
இக்கூட்டணி ஒட்டுமொத்தமாக 231 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 145 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் வெறும் 50 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் உள்ளது
ஜார்க்கண்ட் பேரவையில் 41 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி என்ற நிலையில், இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை வகித்து, மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட்டில் மீண்டும் ஆட்சியமைக்கிறது.
0 Comments