தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தேசிய சுகாதார இயக்கத்தின் சாதனைகள் விவரிக்கப்பட்டன.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ‘கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கம் முன்னெப்பதும் இல்லாத இலக்குகளை எட்டியுள்ளது.
இந்த இயக்கத்தின்கீழ் கடந்த 2021-22 காலகட்டத்தில் சுமாா் 12 லட்சம் சுகாதார பணியாளா்கள் பணியில் இணைந்தனா். இந்த இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது’ என்றாா்.
கடந்த 2013-இல் தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து தேசிய சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments