Recent Post

6/recent/ticker-posts

CLEANEST AIR CITIES IN INDIA 2025 / நாட்டின் மாசில்லாத காற்று கொண்ட நகரங்களின் பட்டியல் 2025

CLEANEST AIR CITIES IN INDIA 2025
நாட்டின் மாசில்லாத காற்று கொண்ட நகரங்களின் பட்டியல் 2025

CLEANEST AIR CITIES IN INDIA 2025 / நாட்டின் மாசில்லாத காற்று கொண்ட நகரங்களின் பட்டியல் 2025

TAMIL

CLEANEST AIR CITIES IN INDIA 2025 / நாட்டின் மாசில்லாத காற்று கொண்ட நகரங்களின் பட்டியல் 2025: இந்தியாவில் காற்றின் தரம் சவாலாக இருக்கும் நிலையில், டெல்லி உள்பட பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் காற்றின் தர கட்டுப்பாட்டுக்கான தகவலை வெளியிட்டுள்ளது.

தூய்மையான காற்றை அனுபவிக்கும் நகரங்களில் முதல் இடத்தை திருநெல்வேலி பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெருமையாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் அருணாச்சலப்பிரதேசத்தின் நாகர் லகுன் என்ற நகரமும், மூன்றாவது இடத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி நகரமும் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு நகரமான தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் நகரங்களில், முதல் இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மேகலாயாவின் பிரிட்ஹேட் நகரம் உள்ளது.

சண்டிகர், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள மாநிலங்களின் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

CLEANEST AIR CITIES IN INDIA 2025: While air quality is a challenge in India, the increasing air pollution in many cities including Delhi is a great shock to the people. In this situation, the Central Pollution Control Board has released information on air quality control across India.

Tirunelveli has secured the first place among the cities enjoying clean air. This is considered a pride for Tamil Nadu. The city of Nagar Lagoon in Arunachal Pradesh is in second place, and the city of Madikeri in Karnataka is in third place.

It is noteworthy that in this list, Thanjavur, another city from Tamil Nadu, has secured the fifth place. On the other hand, among the cities with the worst air quality, the capital Delhi is in first place.

The city of Ghaziabad in Uttar Pradesh is in second place. The city of Brits in Meghalaya is in third place. It is noteworthy that Chandigarh, Uttar Pradesh, Jharkhand, Himachal Pradesh, and Maharashtra are in the top 10 states with the worst air quality.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel