Recent Post

6/recent/ticker-posts

ICC AWARD 2024 / ஐசிசி விருது 2024


ICC AWARD 2024 / ஐசிசி விருது 2024

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்

கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சார்பில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை இலங்கை அணியின் இளம் வீரரான கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் மட்டும் 1,451 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50க்கும் சற்று அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டுக்கு முன்பாக இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியிருந்த கமிந்து மெண்டிஸ், தற்போது இலங்கை அணியில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா

கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டிகளுக்கான வீராங்கனை விருதினை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, கடந்த ஆண்டு 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் ஸ்மிருதி மந்தனா குவித்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது.

சொந்த மண்ணில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களிலும் ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் இடம்பெற்றிருந்த நிலையில், பும்ரா சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel