மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் திரு ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.
சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.
சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம்(MECL) அர்ஜென்டினாவின் கேடமார்கா மாகாண அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக இந்த ஒப்பந்தம் விளங்குகிறது.
0 Comments