உபகரணங்களின் 80%-க்கும் அதிகமான உதிரி பாகங்கள் மற்றும் துணை அமைப்புகள் உள்ளூரில் இருந்து பெறப்படுவதால், இது இந்திய அரசின் தற்சார்பு இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.
குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது வேதியியல், உயிரியல், கதிரியக்கவியல், அணு ஆயுதங்களிடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
காற்றின் வழியாக பரவும் நச்சு வேதிப்பொருட்களை கண்டறிய இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. களப் பிரிவுகளில் இதனைச் சேர்ப்பது, இந்திய ராணுவத்தின் தற்காப்புத் திறன் நடவடிக்கைகளுக்கும், அமைதிக் காலத்திலும், குறிப்பாக தொழில்துறை விபத்துக்கள் தொடர்பான பேரிடர் நிவாரண சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் இது பயன்படும்.
0 Comments