ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரிய தினம் ஆண்டுதோறும் டெல்லியில் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரியம் பல்வேறு பிரிவுகளில் நீர்வளத்துறையில் 2024ம் ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை கோரியது. தமிழ்நாடு நீர்வளத்துறை விருதுகளுக்காக விண்ணப்பித்தது.
ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரியம் 2024ம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை வழங்க தமிழ்நாடு நீர்வளத்துறையை தேர்வு செய்துள்ளது.
அதன்படி பங்கேற்பு பாசன மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மையில் சிறந்து விளங்குதல் - உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், சிறந்த நீர்வள ஆதாரத் திட்டமான சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை நீரேற்று பாசனம் மூலம் திருப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ்நாடு நீர்வளத்துறைக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments