Recent Post

6/recent/ticker-posts

ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ரூ.153.36 கோடி நிதியுதவி வழங்க மத்திய உயர்நிலைக் குழு ஒப்புதல் / Central High-Power Committee approves Rs. 153.36 crore financial assistance to hail-hit Manipur

ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ரூ.153.36 கோடி நிதியுதவி வழங்க மத்திய உயர்நிலைக் குழு ஒப்புதல் / Central High-Power Committee approves Rs. 153.36 crore financial assistance to hail-hit Manipur

2024 ஆம் ஆண்டில் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ரூ.153.36 கோடி கூடுதல் மத்திய உதவியை வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எஃப்)பெறப்படும் இந்த உதவி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் (எஸ்டிஆர்எஃப்) கிடைக்கும் ஆண்டிற்கான தொடக்க நிலுவையில் 50% சரிசெய்தலுக்கு உட்பட்டது.

இந்தக் கூடுதல் உதவி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ள நிதிக்கும் மேலானதாகும்.

2024-25 நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் வழங்கியுள்ளது.

கூடுதலாக, மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2025-26 நிதியாண்டில், மத்திய அரசு எஸ்டிஆர்எஃப் இன் கீழ் ரூ.895.60 கோடியையும், என்டிஆர்எஃப் இன் கீழ் ரூ.929.633 கோடியையும் 07 மாநிலங்களுக்கு இதுவரை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel