மார்ச் 2025 மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி விகிதம் 3.0 சதவீதமாகும். இது 2025 பிப்ரவரி மாதத்தில் 2.9 சதவீதமாக (விரைவான மதிப்பீடு) இருந்தது.
சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.4 சதவீதம், 3.0 சதவீதம் மற்றும் 6.3 சதவீதமாகும்.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் விரைவான மதிப்பீடுகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 160.0- ஆக இருந்தது இந்த மார்ச் மாதத்தில் 164.8 ஆக உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி, மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 156.8, 160.9 மற்றும் 217.1 ஆக உள்ளன.
உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த 23 தொழில் குழுக்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
தொழில் குழுக்களில் உள்ள நிறுவனங்களில் "அடிப்படை உலோகங்களின் உற்பத்தி", "எஃகு குழாய்கள், பார்கள் உள்ளிட்ட பல்வேறு வகை உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
"மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் உற்பத்தி" என்ற தொழில்துறை குழுவில், "வாகன உதிரிபாகங்கள், லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் பாகங்கள்" ஆகியவை வளர்ச்சியடைந்துள்ளன.
0 Comments