காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது.
ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Comments