Recent Post

6/recent/ticker-posts

103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அம்ரித் நிலையங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார் / PM Modi inaugurates 103 redesigned Amrit centres

103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அம்ரித் நிலையங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார் / PM Modi inaugurates 103 redesigned Amrit centres

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த நிலையில், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'அம்ரித் நிலையங்களை' பிரதமர் திறந்துவைத்தார்.

தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

ஜார்க்கண்டில் மறுசீரமைக்கப்பட்ட மூன்று ரயில் நிலையங்களைப் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். குந்தி மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் சாலை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் மாநில நிலம் மற்றும் வருவாய் அமைச்சர் தீபக் பிருவா, முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, டோர்பா உறுப்பினர் சுதிவ்யா குடியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்கத்தில் கல்யானி கோஷ்பரா ரயில் நிலையம், பங்கர் ரயில் நிலையம், ஜாய்சண்டி பஹார் ரயில் நிலையம் உள்பட புதுப்பிக்கப்பட்ட மூன்று ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரசேதத்தில் மாஹே அம்ரித் பாரத் ரயில் நிலையமும் திறக்கப்பட்டது. அசாம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அம்ரித் ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel